அபாய கட்டத்தில் கிராமம் - தொற்றாளர் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
சுகாதார விதிமுறைகளை மீறி ஆலய கும்பாபிசேகம் இடம்பெற்ற ஓமந்தை, நொச்சிகுளம் கிராமத்தில் கோவிட் தொற்றாளர்கள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அபாய நிலையில் காணப்படுவதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கோவிட் தொற்றாளர்களாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டனர்.
இதனையடுத்து குறித்த 13 தொற்றாளர்களுடன் தொடர்புடைய ஆலயம் மற்றும் 30 வீடுகள் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டன.
தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகிய நிலையில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில் சுமார் 100 பேர் வரையிலேயே வசித்து வரும் நிலையில், 38 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனால் கோவிட் அச்சுறுத்தல் மிக்கதாகக் குறித்த கிராமம் மாறியுள்ளதால் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி அவதானமாக இருக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
