விஜேயகுமாரதுங்க படுகொலை தொடர்பான அறிக்கை குறித்து விடுக்கப்பட்ட வேண்டுகோள்
சிறீலங்கா மஹஜன கட்சியின் ஸ்தாபகரும், பிரபல நடிகரும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவருமான விஜேயகுமாரதுங்கவின் படுகொலை குறித்த அறிக்கையும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
படலந்த ஆணைக்குழு அறிக்கையுடன் மேலும் சில ஆணைக்குழு அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகளை சமர்க்ககும் நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய வாக்கு வித்தியாசத்தில்...
1989 காலக்கட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் 16 பேரும், கட்சி ஆதரவாளர்கள் 630 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் கொலைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
1989ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க மற்றும் ரணசிங்க பிரேமதாச ஆகியோர் ஜனாதபதி தேர்தலில் போட்டியிட்ட போது மொனராகல் மாவடடத்தில் 42 வாக்குப் பெட்டிகளில் ஒரு வாக்குகள் கூட போடப்பட்டிருக்கவில்லை.
இதன் காரணமாகவே மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் பிரமேதாச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பட்டலந்த கொலை போன்றே விஜேயகுமாரதுங்க படுகொலை மற்றும் எமது கட்சியின் உறுப்பினர்கள் படுகொலை செய்பய்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சாமர சம்பத் தஸநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri