சவூதியில் மருத்துவ குழுவை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்
சவூதி அரேபியாவில் உள்ள டாக்டர் சுலைமான் அல் ஹபீப் மருத்துவக்குழுவை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்துள்ளார்.
சவூதி அரேபியாவிற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது, மத்திய கிழக்கின் முன்னணி சுகாதார வழங்குநரான டாக்டர் சுலைமான் அல் ஹபீப் மருத்துவ சேவைகள் குழுமத்தின் உயர் நிர்வாகத்தை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்தார்.
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் AI-யில் இயங்கும் அமைப்புகளுடன் கூடிய குழுவின் அதிநவீன மருத்துவ மையத்திற்கும் அமைச்சர் ஒரு சுருக்கமான விஜயம் மேற்கொண்டார்.

இலங்கையர்களின் பங்களிப்பு
கொழும்பில் உள்ள அவர்களின் மேம்பாட்டு மையம் மூலம் டாக்டர் சுலைமான் அல் ஹபீப் குழுமம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதில் இலங்கையர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அவர் திருப்தியுடன் குறிப்பிட்டார்.
மருத்துவ சுற்றுலா மற்றும் தொடர்புடைய சேவைகளில் ஒத்துழைப்பு உட்பட இலங்கையில் சுகாதாரத் துறையில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam