நினைவேந்தல் விவகாரம்! வீரவன்ச, கம்மன்பில ஆகியோருக்கு அநுர அரசு பதிலடி
நினைவேந்தல் உரிமையை நிராகரித்து மீண்டும் இனவாதத்தை தூண்ட முயல வேண்டாம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வு என்ற பெயரில் மரணித்த தமிழீழ விடுதலைப்புலிகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவுகூர்ந்தமைக்கு அநுர அரசு அனுமதி வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
அவர்களின் கருத்துக்களுக்குப் பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,
“கடந்த காலங்களில், போரில் உயிரிழந்த தமது உறவுகளை வடக்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும்போது அதற்கு எதிராக தெற்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.
இனவாதக் கருத்துக்கள்
அதேபோல் போரில் உயிரிழந்த தமது உறவுகளை தெற்கில் உள்ள உறவுகள் நினைவேந்தும்போது அதற்கு எதிராக வடக்கில் உள்ள சிலர் இனவாதம் கக்கினார்கள்.

ஒவ்வொரு வருடமும் மே, நவம்பர் மாதங்களில் இத்தகைய இனவாதக் கருத்துக்கள் வெளிவந்திருந்தன. இந்த இனவாதக் கருத்துக்கள் இனியும் இருக்கக்கூடாது.
நினைவேந்தல் உரிமை சகல இனத்தவர்களுக்கும் உரியது. அதில் இன வேறுபாடு இருக்கக்கூடாது.
நினைவேந்தல் நிகழ்வு
இலங்கையில் நினைவேந்தல் நிகழ்வைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் எவரும் பார்க்கக்கூடாது.

நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை எவரும் நடத்தலாம்.
அதை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதேவேளை, சட்டங்களை மீறிச் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அது பொலிஸாரின் கடமையாகும்” என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam