இலங்கை - இந்திய வர்த்தக உறவு அபார ஆற்றல் மிக்கது - இலங்கையின் அமைச்சர் பெருமிதம்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவு ஆற்றல் மிக்கது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19.10.2024) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக இயக்கவியல் அபாரமான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்தியா செய்த உதவிகள்
விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளுக்கு அத்தியாவசிய இறக்குமதிகளை வழங்கும் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இந்தியா செய்த உதவிகள் நினைவுக்கொள்ளத்தக்கவை என்று விஜித ஹேரத் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam