இந்திய கடற்படையின் வேகத்தாக்குதல் கப்பல் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளது
இந்திய கடற்படையின் கப்பலான ஐஎன்எஸ் கல்பேனி (INS Kalpeni) இன்று (19.10.2024) கொழும்பை வந்தடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ் கல்பேனி கப்பல், இந்திய கடற்படையின் கார் நிகோபார் - வகுப்பு வோட்டர்ஜெட் எப்ஏசி என்ற வேகத் தாக்குதல் கப்பலாகும். இது 2010 ஒக்டோபர் 14ஆம் திகதி தமது சேவையை ஆரம்பித்துள்ளது.
இந்த கப்பலுக்கு லட்சத்தீவுகளில் உள்ள கல்பேனி தீவின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. இது கடலோர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பின் முதன்மைப் பாத்திரத்துடன் கொச்சியில் செயற்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கருவிகள்
இந்த கப்பல் கடத்தல் தடுப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்றது. இந்தநிலையில், இலங்கையில் இந்தக்கப்பல் இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நங்கூரமிட்டிருக்கும்.
இந்தக் கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள அத்தியாவசிய தொழில்நுட்ப கருவிகள், இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
நிரப்புதல்களை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, கப்பல் பணியாளர்கள் கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கும் விஜயம் செய்வார்கள் என்று இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |