நாட்டில் பொருட்களின் விலை குறைந்துள்ளது! விஜித் ஹேரத்
நாட்டில் பணவீக்கம் குறைந்து பொருட்களின் விலை குறைந்துள்ளதாக அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று(27) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடவியலாளர்கள் மாநாட்டிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு
மேலும் உரையாற்றிய அவர்,
நாட்டின் பொருளாதாரம் நிலையான தன்மையில் முன்னோக்கி செல்வதோடு வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு கிடைத்துள்ளதோடு உல்லாச பயணத்துறை மேலும் மேலும் வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
உல்லாச பயணிகளின் வருகையால் பெற்றுக் கொண்ட வருமானம் கடந்த ஆறு மாதங்களில் 1.7 பில்லியன் டொலர் கிடைத்துள்ளது. எங்களின் ஏற்றுமதி பொருளாதாரம் அதிகரித்துள்ளது.
எமது பொருளாதாரம்
அது 10 பில்லியன் டொலராகும்.வெளிநாட்டு கையிருப்பு நிலையான தன்மையில் காணப்படுகிறது.
டொலரின் பெறுமதி 295-300 என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று எமது பொருளாதாரம் நிலையான தன்மைக்கு கொண்டுவரப்பட்டது, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
