விருதுநகர் தொகுதியில் கடுமையான போட்டியை கொடுக்கும் விஜயகாந்தின் மகன்
தேமுதிக (DMDK) வேட்பாளரும் விஜயகாந்தின் (Vijaykanth) மகனுமான விஜய பிரபாகரன் (Vijaya Prabakaran), விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடுமையான போட்டியைக் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொகுதியில், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும் பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் விஜய பிரபாகரன் முன்னிலையிலும் அதன் பின்னர் சிறிது நேரத்தில் மாணிக்கம் தாகூர் முன்னிலையிலும் இருந்தனர்.
2019 நாடாளுமன்ற தேர்தல்
அதனையடுத்து, சில சுற்றுக்களுக்கு பின்னர் 32 வாக்குகளால் விஜய பிரபாகரன் மீண்டும் முன்னிலைக்கு வர, இவ்வாறு ஒரு போட்டியான நிலவரம் காணப்பட்டது.
முன்னதாக, 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகரில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட அழகர் சாமி 3 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.
எனினும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அனுதாப வாக்குகள்
விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், விஜயகாந்தின் சொந்த ஊரான இராமநாதபுரம் தொகுதியும் உள்ளது.
இந்நிலையில், அண்மையில் மறைந்த விஜயகாந்தின் அனுதாப வாக்குகளும் விஜய பிரபாகரனுக்கு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
