விடுதலைப்புலிகள் குறித்து பேசிய விஜயகலா :நீதிமன்றம் விடுத்த உத்தரவு- செய்திகளின் தொகுப்பு (Video)
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக சி.ராகல முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
அவருக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடமிருந்து இதுவரை அறிவுறுத்தல்கள் கிடைக்கவில்லை என விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நீதிமன்றில் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam