2005இல் வழங்கப்படாத வாக்குகள் இம்முறை ரணிலுக்கு!
2005இல் தமிழ் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அளிக்காத வாக்குகளையும் இம்முறை அளித்து அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் நேற்று (13.09.2024) இடம்பெற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2 வருடங்களுக்கு முன்னர் மக்கள் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு வாங்க வீதிகளில் வரிசையில் நின்றது வரலாறு.
இழந்த உடைமைகள்
அந்த நிலையினை மாற்றியமைத்ததோடு நாட்டில் பொருளாதாரத் தன்மையினை ஒரு நிலைக்கு கொண்டு வந்தவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
அத்துடன், அவரின் ஆட்சி காலத்தில் தான் வடக்கிற்கான 3 பாதைகளும் திறக்கப்பட்டதோடு உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பொதுமக்களின் காணிகள் பலவும் விடுவிக்கப்பட்டன. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 90 ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.
யுத்தத்தை முடித்த ராஜபக்சக்கள் மக்களுக்கு சரியான வழிகாட்டல்களை செய்யவில்லை. வாழ்வாதார உதவிகளை செய்ய முன்வரவில்லை. இறுதி யுத்தத்தில் மக்கள் பலர் கொல்லப்பட்டதோடு பொதுமக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து தமது சொத்துக்கள் உடைமைகளையும் இழந்தனர்.
முன்னேற்ற பாதை
கடந்த கால அரசுகள் கிறீஸ் பூதம், வாள்வெட்டு கலாச்சாரங்களை விதைத்தனர். 2013ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது காணி விடுவிப்பிற்காக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்தார்.
2005இல் தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் நாம் துன்பப்பட்டிருக்க மாட்டோம். அந்த தவறை மீண்டும் வடக்கு கிழக்கு மக்கள் விடக்கூடாது.
2005இல் தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்காத வாக்குகளையும்
இம்முறை அளித்து அவரை வெற்றி அடையச் செய்வதன் மூலம் நாட்டினை
முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடிவதோடு தமிழருக்கான தீர்வினையும் பெற்றுக்
கொள்ள முடியும்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 51 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
