விஜயின் திட்டமிட்ட செயல்.. பூதாகரமாகும் குற்றச்சாட்டுக்கள்
கரூரில் விஜய் நேர அட்டவணையை கடைபிடிக்கவில்லை எனவும் பொலிஸ் அதிகாரிகள் கூறியதை மீறி தவறான வழியில் வேண்டுமென்றே சென்றதாக தமிழ்நாட்டு பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பேரணிக்கு கூட்டத்தை அதிகரிப்பதற்காக விஜய் வேண்டுமென்றே தாமதமாக வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டு பொலிஸாரின் இத்தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை விஜயின் கரூர் பேரணியில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பான வழக்கில் தவெக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.
பொலிஸ் அனுமதி மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர்கள் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, பொலிஸார் தரப்பில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது எனவும் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் பொலிஸார் கோரிக்கை முன் வைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனை தொடர்ந்து, விஜய் பரப்புரைக்கு தானாக வந்த கூட்டம் அது. நாங்கள் வாகனம் வைத்து அழைத்து வரவில்லை. 1.20 இலட்சம் சதுர அடி கொண்ட பகுதியில் பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. அங்கு 60,000 பேர் கூடியிருக்க முடியும் என தவெக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
டொப் ஸ்டார் விஜய்..
இருப்பினும் தவெக கேட்ட பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. விஜய் பிரசாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பு அதிமுக பிரசாரம் நடந்தது. இதனால், அந்த இடத்தை விஜய் பிரசாரத்துக்கு வழங்கினோம் என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நீதிபதியின் கேள்விக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை எனவும் விஜயின் கூட்டத்திற்கு முதலில் 10,000 பேர் வருவார்கள் என பொலிஸாரிடம் கூறியதாக தவெக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கேள்வி எழுப்பிய நீதிபதி, உங்கள் கட்சித் தலைவரை முதலமைச்சர் உடனோ மற்ற கட்சித் தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம். அவர் டொப் ஸ்டார். வார விடுமுறை, காலாண்டு விடுமுறை நாளில் எப்படி குறைந்த எண்ணிக்கையில் வருவார்கள் என்று கணித்தீர்கள் என வினவியுள்ளார்.
தொடர்ந்து, பொலிஸார் தரப்பில் கரூரில் நேர அட்டவணையை விஜய் கடைபிடிக்கவில்லை. பொலிஸார் கூறியதை மீறி தவறான வழியில் சென்றார்கள். புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனியப்பன் கோயில் சந்திப்பில் தாமதம் செய்தனர்.
அளவற்ற கூட்டம்
முனியப்பன் கோயில் சந்திப்பில் விஜய் கேரவனுக்குள் சென்று விட்டார். கேரவனுக்குள் செல்லாமல் விஜயை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மதியழகன், பவுன்ராஜ் இருவரும் வாகனத்தை செல்லவிடாமல் தாமதப்படுத்தியது தான் நெரிசலுக்கு காரணம். கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் கூறினோம்.
இன்னும் முன்னே செல்ல வேண்டும் என ஆதவ் அர்ஜுனா அதை மறுத்துவிட்டார். 2 நோயாளர் காவு வண்டிகள் வந்த போதும் விஜய் பேசிக்கொண்டிருந்தார் என பொலிஸார் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா என்னும் கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வரும் நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு அவர்தான் காரணம் - கடிதம் எழுதி வைத்து உயிரை மாய்த்த தவெக நிர்வாகி News Lankasri
