கரூர் பிரசார கூட்ட விவகாரத்திற்கு திமுக கட்சியினரே காரணம்! தவெகவினர் பகிரங்கம்
கரூர் பிரசார கூட்ட விவகாரத்திற்கு திமுக கட்சியினரே காரணம் என தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, விஜயின் பெயரைக் கெடுப்பதற்கு திமுக கட்சியினர் இந்த அராஜக செயலை செய்துள்ளனர் எனவும் விஜய்க்கு ஆதரவாக வந்த தொண்டர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மக்களின் உயிரை வைத்து அரசியல் செய்யும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை நாட்டில் இல்லாதொழிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவினர்
அத்தோடு, திமுகவினர் உயிரை எடுத்து அரசியல் பண்ண வேண்டும் என நினைத்தால் மக்கள் அதற்கான தீர்வை தருவார்கள் எனவும் விஜயின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும், மக்களிற்கு பாதுகாப்பிற்கு கொடுக்க கூட அரசாங்கத்திற்கு துணிச்சல் இல்லை எனவும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



