டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று புதுடெல்லிக்குச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், மேற்கொள்ளும் முதல் டெல்லிப் பயணம் இதுவாகும்.
இதன்படி, இன்று மாலை 04.30 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்தித்து கலந்துரையாடலில் முதலமைச்சர் ஈடுபட்டிருந்தார்.
விஜய்க்கு வாழ்த்து
இதன்போது, மாநிலம் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
#WATCH | Delhi: Tamil Nadu CM C. Joseph Vijay arrives at Seva Teerth to meet Prime Minister Narendra Modi. pic.twitter.com/QdwoypPANQ
— ANI (@ANI) May 27, 2026
குறிப்பாக, நீட் தேர்வு, தமிழகத்திற்கான நிதி, கடற்றொழிலாளர் பிரச்சினை, சர்ச்சைக்குரிய மேகதாது அணை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது, பிரதமர் மோடியுடன் விஜய் கலந்துரையாடியதாக தெரியவருகின்றது.
இதேவேளை, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டமைக்கு பிரதமர் மோடி, விஜய்க்கு வாழ்த்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.




