இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.. பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம்

Sri Lanka Police Sri Lankan Peoples Inspector General of Police
By Benat May 27, 2026 11:59 AM GMT
Report

பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாகப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி மின்னஞ்சல்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் பெயரைப் போலியாகப் பயன்படுத்தி சைபர் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டிப் பணம் பறிக்கும் மின்னஞ்சல் வலையமைப்பு தற்போது செயல்பட்டு வருகின்றது.

24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா

24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா

இணைப்புக்களை திறக்காதீர்..

இந்த நிலையில், இது குறித்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சைபர் பாதுகாப்பு மற்றும் திறந்த மூல விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பொலிஸின் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்தின் பெயரையும், பொலிஸ்மா அதிபரின் பெயர் மற்றும் போலி கையொப்பத்தையும் பயன்படுத்தி அனுப்பப்பட்ட மிரட்டல் மற்றும் பணம் கேட்கும் மின்னஞ்சல் வலையமைப்பு குறித்து இதன் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.. பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம் | Police Issue Urgent Warning To Sri Lankans

இந்த செயல்பாடுகள் மூலம் இலங்கை பொலிஸின் நற்பெயருக்கும் பொதுமக்களின் நம்பிக்கைக்கும் பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் எனக் கவனிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இவ்வாறான சந்தேகத்திற்கிடமான, அச்சுறுத்தும் அல்லது அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தொடர்பாக தேவையற்ற பதற்றத்திற்கு பொதுமக்கள்  ஆளாக வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும், அந்த செய்திகளுக்குப் பதிலளிப்பதில் இருந்தும் அல்லது அவர்கள் கோரும் பணத்தை செலுத்துவதை தவிர்க்குமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.. பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம் | Police Issue Urgent Warning To Sri Lankans

அந்த மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புக்களை திறக்காமல் இருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன், இத்தகைய குற்றச் செயல்கள் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ, இலங்கை பொலிஸ் கணினி குற்ற விசாரணைப் பிரவிற்கோ அல்லது பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கோ அறிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த மோசடிக்காரர்களை சட்டத்தின் முன் நிறுத்த இலங்கை பொலிஸார் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளனர்.

20 நாள் பச்சிளம் குழந்தையை விற்ற தாய்..! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்

20 நாள் பச்சிளம் குழந்தையை விற்ற தாய்..! பொலிஸ் விசாரணையில் வெளிவந்த தகவல்

சிறையில் இருக்கும் ஆபத்தான நபரிடம் இருந்து முஜிபுர் எம்.பிக்கு வந்த அழைப்புகள்! வெளிக்கிழம்பும் புதிய சர்ச்சை

சிறையில் இருக்கும் ஆபத்தான நபரிடம் இருந்து முஜிபுர் எம்.பிக்கு வந்த அழைப்புகள்! வெளிக்கிழம்பும் புதிய சர்ச்சை

 



4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US