பெரும் சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சர் விஜய்..! பிரதமராகக்கூடிய வாய்ப்புள்ளதாக தகவல்
முதலமைச்சர் விஜயின் ஜாதகம் பிரதமர் மோடியின் ஜாதகத்தை போலுள்ளதாகவும் மோடிக்கு பிறகு பிரதமராகும் வாய்ப்புள்ளது என்று ஜோதிடர் ரத்தன் பெண்டிட் கூறியுள்ளமையானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டமையானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஜோதிடருக்கு பதவி
இதனை பரிசீலனை செய்வதாக முதல்வர் விஜய் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து குறித்த பதவி ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. அரசு பதவி வழங்கப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது குறித்து ரத்தன் பண்டிட் விளக்கம் அளித்துள்ளார்.

எனக்கு பதவி கொடுக்கப்பட்டதே முதலில் எனக்கு தெரியாது. பணி நியமனம் ரத்து செய்யப்பட்டது எனக்கு வருத்தம் இல்லை. சில நிமிடங்கள் மட்டும் அதிர்ச்சியாக இருந்தது. விஜய்யின் அன்பு வட்டத்தில் இருக்கும் மனிதர் அதுவே எனக்கு போதுமானது.
விஜய்க்கு ஜோதிடம் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. ஜோதிடத்திற்காக விஜய் என்னை அழைப்பது இல்லை. முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்.
பிரதமராக வாய்ப்பு
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா இறந்த சில மாதங்களில் நான் விஜய் மற்றும் அஜித்தை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். நான் நீண்ட காலமாக விஜய் தான் சிஎம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
விஜய் ஜாதகத்தை பொறுத்தவரை போட்டியில்லாமல் அடுத்த 40 - 50 வருஷம் வாழ போகிறார். பிரதமர் மோடி ஜாதகம் மாதிரிதான் விஜய் ஜாதகம் உள்ளது.

அவர் ஜாதகத்தில் உள்ள எல்லாம் இவர் ஜாதகத்திலும் உள்ளது. மோடி 25 வருடம் மூத்தவர். அவர் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு போகும் போது தானாக இன்னொரு அதிர்ஷ்டசாலி அங்கு இருக்க மாட்டார். அப்போது போட்டியே இல்லாத பிரதமராக இவர் ஏன் மாறக்கூடாது.
மோடிக்கு பிறகு பிரதமராக விஜய் அமர பிற்காலத்தில் வாய்ப்பு உள்ளது. கண்டிப்பாக பிரதமர் மட்டுமின்றி உலகம் போற்றும் தலைவராக விஜய் இருப்பார். விஜய்க்கு தோல்வி முகம் என்று ஒன்று கிடையாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri