பயணத்தடையால் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரன்
நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையால் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மக்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனால் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11 மணி தொடக்கம் பாரதிபுரம், மலையாளபுரம், கோணாவில் கிழக்கு, செல்வாநகர், திருவையாறு, பரந்தன், பிரமந்தனாறு, கல்லாறு, சாந்தபுரம், அம்பாள்குளம் ஆகிய கிளிநொச்சி மாவட்டத்தில் பயணத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அடையாளப்படுத்தப்பட்ட உதவி தேவைப்படுவோர்க்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் இணைந்து தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள் வாழ்வாதாரத்துக்குத் தேவையான பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த வாழ்வாதார உதவிகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர்
க.வி.விக்னேஸ்வரன் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய்
வழங்கியதுடன், சிட்னி தமிழ் உறவுகள் சிலரும் நிதிப் பங்களிப்பு
வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam