மகாவலி அபிவிருத்தியின் பெயரில் நில ஆக்கிரமிப்பு: யாழில் வெடித்த போராட்டம்
வடக்கு மாகாண (Northern province) ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது முல்லைத்தீவின் (Mullaitivu) கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் கருணாகேணி பிரதேச மக்களினால் இன்று (08.05.2024) காலை 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மனு கையளிப்பு
போராட்டத்தில் 'தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காதே', 'மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து', 'எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே', 'மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் - தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri