உள்ளூர் வளங்களை அழிக்காதே: யாழில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் யாழ்.புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று (05) புங்குடுதீவு - மடத்துவெளிப் பகுதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுள்ளது.
மண் வளத்தை அழிக்காதே
இந்நிலையில், பாராம்பரிய தொழிலை அழிக்காதே, மதுகுடிப்பதற்கு மண் வளத்தை அழிக்காதே , தொழிலாளர்களுக்கே கடற்றொழில் அமைச்சு முதாலாளிமார்களுக்கு அல்ல என பதாதைகளை தாங்கியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri