மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
மட்டக்களப்பு வாகரை தொடக்கம் கதிரவெளி ஆகிய பகுதிகளில் இடம்பெறும் இல்மனை மற்றும் இறால் வளர்ப்பு ஆகியவற்றை தடுக்குமாறு கோரி வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக பொது அமைப்புக்கள், கடற்றொழிலாளர் சமூகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோரளைப்பற்று வாகரை பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று(02.02.2024) இடம்பெற்ற வேளை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்தி கூட்டம்
அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு முன்னர் பிரதேச செயலத்துக்கு முன்பாக ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் கையில் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பிரதேச செயலகத்தின் பிரதான வாயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வருகை தந்த தங்களுடைய போராட்டம் தொடர்பில் அபிவிருத்தி கூட்டத்தில் கதைக்குமாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தார்கள்.
பின்னர் அபிவிருத்தி குழு தலைவர் சந்திரகாந்தன் வாகனத்தில் வருகை தந்த போதும் வாகனத்தை இடைநிறுத்தாமல் சென்றனர்.
பொலிஸார் குவிப்பு
அதன் பின்னர் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் பிரதேச செயலகத்தின் பிரதான வாயிலை மூடி பொலிஸார் கடமை ஈடுபட்டிருந்தனர்.

பொலிஸார் போராட்டக்காரர்களை கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு அனுமதிக்கவில்லை. கூட்ட நிறைவடைந்ததும் பிரதேச செயலக செயலாளர் அலுவலகத்தில் வைத்து மூன்று ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சந்திரகாந்தன் சந்தித்துள்ளார்.

பின்னர் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் அலுவலகத்துக்கு வெளியில் இறால் பண்ணை மற்றும் இல்மணைட் தொடர்பாக போராட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 10 நிமிடங்கள் முன்
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam