ஒருவர் தலையில் மீது தலைகீழாக இன்னொருவர். படைக்கப்பட்ட சாதனை
ஒரு சகோதரரின் தலையின் மீது மற்றும் ஒரு சகோதரர் தலைக் கீழாக தன்னை சமநிலைப்படுத்திக்கொள்ள இருவரும் சேர்ந்து 100 படிகளை ஏறிக்கடந்து சாதனைபடைத்துள்ளனர்
வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரண்டு சகோதரர்களே இந்த கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ஒரு சகோதரர் தலையில் மற்றொரு சகோதரர் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு ஏறினார்.
பின்னர் கீழே இருந்த சகோதரர் 53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கடந்த 23 ஆம் திகதி ஸ்பெயினில் இவர்கள் தங்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 15 ஆண்டுகளாக இந்த சாதனைக்காக தாம் ஒத்திகை பார்த்து வந்ததாக சாதனை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே 90 படிகளை 52 வினாடிகளில் ஏறி சாதனை படைத்திருந்தனர்.














