வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் உயிரிழப்பு! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (Video)
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, கல்வயலை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் உயிரிழந்த கிரிதரனின் மனைவி எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது, அங்கிருந்து கணவரின் உடலை இங்கே கொண்டு வர 30 இலட்சம் ரூபா வரையில் தேவைப்படும் என தெரிவித்து என்னிடம் கையொப்பம் கேட்டனர்.
அந்த 30 இலட்சம் இருக்குமாயின் நான் ஏன் என்னுடைய கணவரை கடல் கடந்து அனுப்ப வேண்டும். நான்கு பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும், கடன் பிரச்சினைகளும் இருக்கின்றன அவற்றிலிருந்து மீள வேண்டும் என தெரிவித்தே கடல் கடந்து என்னுடைய கணவர் சென்றார். இப்படி நடக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.
கடைசியாக நான் அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை, அப்பா இல்லை என்பதை எனது குழந்தைகளுக்கு காட்டுவதற்காக அவரது உடலை எம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடுங்கள் என கதறியழுத வண்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் படகு பிடிப்பட்ட பின்னர் தான் அடுத்த நாள் தொலைபேசியில் அழைத்து கூறினார், எந்தவொரு பிரச்சினையும் இல்லை, யோசிக்க வேண்டாம், நான் அழைப்பினை ஏற்படுத்திய தொலைபேசி எண்ணுக்கு திருப்பி அழைக்க வேண்டாம் என்று.
இதை தான் கடைசியாக கூறினார். அதன் பின்னர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. கடைசியாக அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை தான் நான் அறிந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ - தீபன்
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri