பதவியேற்று ஒரே ஆண்டில் பதவி விலகிய வியட்நாம் ஜனாதிபதி
கடந்த ஆண்டு வியட்நாம் ஜனாதிபதியாக பதவியேற்ற வோ வான் துவாங் இன்று தனது பதவி விலகல் செய்துள்ளார்.
வோ வான் துவாங் தனது சொந்த காரணங்களுக்காக ஜனாதிபதி பதவி விலகியதாக அந்நாட்டின் அரசு ஊடகத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதி வோ வான் துவாங்கின் பதவி விலகலை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்
வியட்நாம் நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே கட்சியின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் ஜனாதிபதி வோ வான் துவாங் செயற்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கட்சியின் நற்பெயருக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டுள்ளது. இந்த சூழலில் வோ வான் துவாங் பதவி விலகி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |