வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஹரிணி இடையே முக்கிய பேச்சு
இலங்கைக்கு அரச விஜயம் மேற்கொண்ட வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சு நேற்று(08.05.2026) பிற்பகல் நடைபெற்றது.
இங்கு வியட்நாம் ஜனாதிபதியை மிகவும் அமோகமாக வரவேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காகத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 56 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் மேற்கொள்ளப்படும் டோ லாமின் இந்த இலங்கை விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பங்களிப்பு, நம்பிக்கை மற்றும் நட்புறவைப் பிரதிபலிப்பதாக அமைவதுடன், எதிர்காலத்தில் இரு நாட்டு உறவுகளிலும் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் என்றும் பிரதமர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.



1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 11 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan