வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
பிரதிவாதி சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை
இதன்போது, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஆயிஷா ஜினசேன தெரிவித்தார்.
இந்த பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் மன்றில் குறிப்பிட்டார்.
இதனையடுத்து வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியார் நாயகத்துக்கு உத்தரவிட்டது.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
