தமிழர் பகுதியில் இலங்கை எரிசக்தி நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்
இலங்கை தனியார் எரிசக்தி நிறுவனம் ஒன்று, வவுணதீவில் ஒரு தனித்த மின்னேற்றி எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்திட்டத்திற்காக குறித்த நிறுவனம் பங்குச் சந்தை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எரிசக்தி சேமிப்பு அமைப்பு
இது தொடர்பில் அந்நிறுவனம் மேலும் குறிப்பிடுகையில், "வவுணதீவு திட்டம் பதினைந்து (15) ஆண்டுகள் இயக்க ஒப்பந்தக் காலத்துடன் கட்டமைத்தல், சொந்தமாக்குதல் மற்றும் இயக்குதல் (BOO) மாதிரியின் கீழ் உருவாக்கப்படும்" என்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வசதி 10MW/40MWh மொத்த நிறுவப்பட்ட திறனைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகின்றது.
மேலும், திட்ட நிதியுதவி 80:20, Debt-to-Equity கட்டமைப்பைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாகவும் கூறப்படுகின்றது.
கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.. Cineulagam