யாழில் வீட்டினுள் புகுந்து பெட்ரோல் திருட்டு: இணையத்தில் பரவும் காணொளி(Photo)
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை இருவர் திருடியுள்ளனர்.
குறித்த வீட்டினுள் அதிகாலை 2.30 மணியளவில் நுழைந்த இருவர், வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
பெட்ரோல் திருட்டு
அதன் பின்னர் வீட்டில் பொருத்தியிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமராவில் பரிசோதித்த போது , வீட்டினுள் அத்து மீறி நுழைந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடிக்கொண்டு சென்றமை தெரியவந்துள்ளது.
இணையத்தில் பரவும் காணொளி
இந்நிலையில் தனது வீட்டினுள் புகுந்து பெட்ரோல் திருட்டில் ஈடுபடும் வீடியோ
காட்சியினை சமூக வலைத்தளங்களில் வீட்டின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். அந்த காணொளி தற்போது இணையத்தில் பரவலடைந்து வருகின்றது.



