இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் புதிய திட்டம்!(Photos)
இலங்கையில் நடமாடும் எரிபொருள் விநியோக முறையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு முன்னோடி திட்டமாக நடமாடும் எரிபொருள் விநியோக முறையை பயன்படுத்துவதற்கு சிபெட்கோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நடைமுறை
இந்த நடமாடும் எரிபொருள் பாரவூர்திகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அப்பால் பெரிய திறந்த பிரதேசங்களில் முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படும் கேன்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
நாடளாவிய ரீதியில் இந்த முறை விரைவாக நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri