தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்கள்! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலங்களில் பௌத்த மதகுமார்கள் சிலர் விகாரைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமை தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என நேற்றைய தினம் (11.07.2023) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
நடவடிக்கை எடுப்பதற்கான சட்டமூலம்
இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், பௌத்த சாசனத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில், முறைகேடாக செயற்படும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் இரு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |