தகாத உறவில் ஈடுப்பட்ட பிக்குவை நையப்புடைத்தவர்கள் 8 பேர் கைது
நவகமுவ பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைதான சந்தேகநபர்களை இன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு
நவகமுவ பிரதேசத்தில் பிக்கு மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை கைது செய்யுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பொலிஸாருக்கு விடுக்கப்பட்ட பணிப்புரை
கொழும்பு, நவகமுவை, ரக்சபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் குறித்த மூவரும் தகாத உறவில் ஈடுபட்ட நிலையில் பிரதேச மக்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரதேச மக்களால் மூவரும் ஒப்படைக்கப்பட்டுள்னர்.
இந்நிலையில் பிக்கு ஒருவர் மற்றும் இரண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றத்தில் நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த விகாரையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த தேரர் மற்றும் பெண் ஒருவரும் சிகிச்சைக்காக நவகமுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மற்றைய 22 வயதுடைய பெண்ணும் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri