அடுத்த தேர்தல்களில் மொட்டுக்கே வெற்றி: மகிந்தவின் சகா ஆரூடம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே அடுத்த தேர்தல்களில் வெற்றி நடைபோடும் என் அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று(11.01.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெற்றி வேட்பாளர்
"அடுத்த ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார். எனினும், வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.
வெற்றி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார். இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.
அடுத்த பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையில் அமையும் கூட்டணியே வெற்றி பெறும்.
அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. கப்பல் விவகாரம்கூட இதன் ஓர் அங்கம்தான்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
