கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பதவியேற்ற பேராசிரியர் பிரதீபன்
கிழக்கு பல்கலைக்கழத்தின் 11ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நேற்று (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றது.
நேர்முக பரீட்சை
இதில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர்பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை நேற்று (17) அனுப்பிவைத்துள்ளார்.
இதனையடுத்து புதிய உபவேந்தர் நேற்று பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.









ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam
