புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ பதவியேற்பு
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனம்
இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் ஜூலை மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், தற்போதைய கடற்படைத் தளபதி அத்மிரால் காஞ்சன பானகொட அன்றைய தினம் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 1 மணி நேரம் முன்
பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி Manithan
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan