வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரி அதிரடி - சுருக்குவலை பறிமுதல்
ஒளி பாய்ச்சி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை சட்டவிரோத சுருக்குவலை ஒன்று வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுருக்குவலை பறிமுதல்
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (24) மாலை கட்டைக்காடு கடற்கரையில் ஒளி பாய்ச்சி மீன்பிடிக்க உதவியாக மிக இரகசியமாக கொண்டுவரப்பட்டு கடற்கரையில் மறைத்துவைக்கப்பட்ட சுருக்குவலை கடற்படையின் விசேட தேடுதலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட சுருக்குவலை மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடியை ஒடுக்கும் வெற்றிலைக்கேணி கடற்படை அதிகாரியின் தீவிர முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்