வைத்தியசாலைக்குள் இளம் யுவதியின் மோசமான செயல் - அதிர்ச்சியில் சுகாதார பணியாளர்கள்
மதவாச்சி வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து பிறந்த ஆண் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி, கலேகம, பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 23ஆம் திகதி இரவு மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர், தனக்கு வயிற்று வலி இருப்பதாக வைத்தியசாலை ஊழியர்களிடம் கூறிவிட்டு, வெளிநோயாளர் பிரிவின் கழிவறைக்கு சென்றுள்ளார்.
வைத்தியசாலை ஊழியர்கள்
சுமார் ஒரு மணி நேரமாகியும் அவர் வெளியில் வராததால், வைத்தியசாலை ஊழியர்கள் கழிவறை கதவைத் தட்டியுள்ளனர். எனினும் அவர் கதவைத் திறக்கவில்லை.

இதனையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கதவை உடைத்து நுழைந்த போது சிசுவை கழிவறைக் குழிக்குள் போட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சிசுவும் அந்தப் பெண்ணும் வைத்திய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிசு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
அதன்பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அந்தப் பெண் அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குழந்தையின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் திருமணமாகாதவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.