கால்நடை மருத்துவர் மற்றும் நால்வர் கைது
போலி ஆவணங்களை கொண்டு சினையான பசுக்கள் உட்பட 20 மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் பதவிய பிரிவின் கால்நடை மருத்துவர் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கால்நடை மருத்துவரையும் மற்றுமொருவரையும் கெபித்திகொல்லேவ மாவட்ட நீதவான், தலா 500,000 ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
ஏனைய மூன்று பேரையும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
போலி ஆவணம்
குறித்த கால்நடை மருத்துவர், திருடப்பட்ட சினையான பசுக்களை கொண்டு செல்வதற்கு போலி ஆவணத்தை வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவம் தொடர்பில், தலைமறைவான பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரை கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 5 மணி நேரம் முன்
வெளித்தோற்றத்தால் அனைவரையும் கவரும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan