நுவரெலியாவில் போக்குவரத்து நெரிசலால் திணறும் சுற்றுலா பயணிகள்
நுவரெலியாவில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுவதாலும், வார இறுதி விடுமுறையுடன் பௌர்ணமி தின தொடர் விடுமுறை இருந்தமையால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன், நுவரெலியா - கண்டி போன்ற பிரதான வீதிகளில் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வெகுநேரம் தரித்து நின்ற வாகனங்கள்
போக்குவரத்து நெரிசலால் பிரதான வீதிகளில் சுமார் 5.6 கி.மீ தூரம் வரையும் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் தரித்து நிற்பதும் தொடர்ந்து வருகிறது.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

