வடக்கில் வெசாக் நிகழ்வு தொடர்பில் பரவும் தகவல் - சி.ஐ.டியில் முறைப்பாடு
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும் அலங்கார ஏற்பாடுகளுக்கும் ஆளுநர் தடை விதித்துள்ளார் என வெளியாகும் தகவல் போலியானது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசாங்க விசேட விடுமுறை அறிவிப்பு - வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
வதந்திகளை நம்பவேண்டாம்
இதன்போது வடக்கில் தன்சல் (உணவு தானம்) வழங்குவதற்கும், வெசாக் அலங்காரங்களை செய்வதற்கும் அம்மாகாண ஆளுநர் தடை விதித்துள்ளார் என சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டும் பகிரப்பட்டுவரும் தகவல் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, “இது பொய்யான செய்தியாகும். தேசிய சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் இப்படியான போலியான செய்திகளைத் தயாரித்த நபர்களுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் சி.ஐ.டியில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம் என நாமும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று - வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 18 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam