மிகவும் சடுதியாக உயர்ந்த காய்கறிகளின் விலை!
தற்போது ஏற்பட்டுள்ள உர நெருக்கடி மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் சந்தையில் காய்கறிகளின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது.
இதன்படி சில்லரை விற்பனையில் காரட் ஒரு கிலோ 550 ரூபாவாகவு, வெண்டைக்காய் கிலோ 500 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 600 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 400 ரூபாவாகவும், மிளகாய் கிலோ 600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
காய்கறி விலை உயர்வால், பலா, ஈரப்பலாக்காய், தேங்காய் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இன்று பொருளாதார மையங்களை சென்றடையும் காய்கறிகளின் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், காய்கறிகளின் மொத்த விற்பனை விலை உயர்வாகவே உள்ளது.
பேலியகொட மெனிங் சந்தைக்கு இன்று 25 வீதத்திற்கும் குறைவான மரக்கறிகளே கிடைத்துள்ளதாக மெனிங் பொது வர்த்தகர்கள் சங்கத்தின் பிரதம அமைப்பாளர் அனில் இந்திரஜித் தெரிவித்தார்.
இதனிடையே சந்தையில் கோழிக்கறியின் விலை உயர்ந்து தற்போது சில்லறை சந்தையில் ஒரு கிலோ கோழிக்கறி 750 ரூபா முதல் 800 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, அதிகரித்து வரும் பொருட்களின் விலைகளை கருத்தில் கொண்டு சமைத்த உணவின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கமும் தீர்மானித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
