ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள்! சலேவின் தாயார் முன்வைத்துள்ள கோரிக்கை
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் இடம்பெறும் காலத்தில் தனது மகன் சுரேஷ் சலேவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டாம் எனக் கோரி, அவரது தாயார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அத்தோடு, தனது மகன் தொடர்பான எந்தவொரு விசாரணைணையும் நிறுத்துமாறு தான் கோரவில்லை எனவும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவை முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் எனவும் கூறினார்.
மேலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்திப்பதற்கான அனுமதியினை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் பின்னணி என்ன, சுரேஷ் சலேவின் தாயார் முன்வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள் என்ன என்பது தொடர்பான முழுமையான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.