எல் நினோ நிலைமை: இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு
எல் நினோ நிலைமையுடன் எதிர்காலத்தில் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கக்கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கே.பி.எல்.சந்திரலால் தெரிவித்துள்ளார்.
நீர் ஆதாரங்கள் வறண்டு போவதன் காரணமாக மின் உற்பத்தி குறையக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மின்சார கொள்வனவு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களை அடிப்படையாக கொண்ட மின் நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான விலைகள் வெளியிடப்படுவது தொடர்பில் இன்றைய தினம் (24.08.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் மின்வெட்டுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆபத்தான நபரின் கட்டுப்பாட்டில் ஆசிரியர் - விசாரணையில் திடுக்கிடும் தகவல் - சிக்கப் போகும் மனைவியும் மகனும்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening