ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் கொலை வழக்கு! முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் விடுதலை
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் 'மொரிஸ்' என்றழைக்கப்படுகின்ற செல்வராஜா கிருபாகரன் ஆகியோர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கம்பஹா இலக்கம் ஒன்று நீதிமன்றத்தில் நீதவான் மாபா பண்டார வழக்கின் தீர்ப்பை இன்றைய தினம் அறிவித்துள்ளார்.
ஜெயராஜ் கொலை வழக்கு
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
தற்கொலை தாக்குதல் காரணமாக முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அப்போது பதவியில் இருந்த பிரதி பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஸ்மன் குரே உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு கம்பஹா மேல் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளது.
உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார இந்த வழக்கின் தீர்ப்பினை அறிவிக்கவுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் விடுதலைப்புலி போராளி செல்வராஜா கிருபாகரன் எனப்படும் மொரிஸ், கம்பஹா பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் செனரத் லக்ஸ்மன் குரே மற்றும் முன்னாள் விடுதலைப்புலி போராளியான தம்பய்யா பிரகாஷ் எனப்படும் தனுஷ் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.