12 வருடங்களுக்கு பின் மகளுக்கு வந்த தீர்ப்பு - 47 வயது தந்தைக்கு நீதிமன்றம் 45 வருட சிறைத்தண்டனை உத்தரவு..!
கடந்த 2013 மற்றும் 2014 ஆண்டு காலப் பகுதிகளில் தனது சொந்த மகளை தொடர்ச்சியாக பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய தந்தைக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கானது இன்று(16.07.2026) வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
மகளுக்கு நேர்ந்த கதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
14 வயது நிரம்பிய சிறுமியை அவருடைய தன்னை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி வந்துள்ளார்.
இந்த சம்பவம் வவுனியா - கனகராயன் குளம் பகுதியில் 2013, 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியிகளில் இடம்பெற்ற நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொலிஸாரால் செய்து செய்யப்பட்டு, பி அறிக்கையின் மூலம் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து குறித்த எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் கடந்த 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பகர்வு பத்திரம் தாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர்பான வழக்கு தொடர்ச்சியாக விளக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டு, குறித்த வழக்கானது வவுனியா மேல் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக இன்று(16.07) திகதியிடப்பட்டுள்ளது.
இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா குறித்த தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத் தண்டணை மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 12 இலட்சம் ரூபாய் நஸ்ட ஈடு மற்றும் ஒரூ இலட்சம் ரூபாய் நீதிமன்ற அபராத தொகையும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
45 வருட கடூழிய சிறைத் தண்டனை
இதன்போது, குறித்த 47 வயது நிரம்பிய எதிரிக்கு எதிராக 4 பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கள் அரச சட்டவாதியால் சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மன்று, இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 4 குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்ட நிலையில், 45 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, நிரூபிக்கப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ரூபாய் 3 இலட்சம் வீதம் 12 இலட்சம் ரூபாய் சிறுமிக்கு நஸ்ட ஈட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றத்திற்கு அபாரம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் உள்ளடங்கப்பட்டுள்ளத.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்க வேண்டிய அவரின் இயற்கை பாதுகாவலராகிய தந்தையே இவ்வாறு குற்றச்சாட்டினை புரிந்துள்ளமை காரணமாக, குறித்த எதிரிக்கு எதிராக எந்தவித கருணையும் காட்டாது அதிகபட்ச தண்டனை விதித்துள்ளதாக நீதிபதி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan