செம்மணி மனித புதைகுழியில் தொடரும் அகழ்வு பணிகள்: இன்றும் எலும்புக்கூடுகள் மீட்பு
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம்(16.7.2026) 34 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுள் 03 என்புத்தொகுதியானது சிறுவர்களினுடைய என்புத் தொகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அகழ்வு பணிகள்
அத்துடன் 01 குழந்தையினுடைய என்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 130 பிறசான்றுப் பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர்.
நீர்கொழும்பு சிறைக் கலவரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி! இடமாற்றம் தொடர்பான செய்திக்கு எதிர்ப்பு..
கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனாவால் கடும் குழப்பம் : பொலிஸாரால் வெளியேற்றம்..