முள்ளியவளையில் பொதுசந்தை மீது விசமிகள் தாக்குதல் :வியாபாரம் பாதிப்பு (Video)
முள்ளியவளை பொது சந்தையின் வியாபாரிகள், விசமிகள் தாக்குதல் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பில் ஈடுப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் உள்ள முள்ளியவளை பொது சந்தையில் அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (10.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத விசமிகள் சிலர் பொது சந்தையில் புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வியாபாரிகளின் மரக்கறிகள் உள்ளிட்ட சந்தை கட்டங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இரவு காவலாளி சேவையில் இருக்கும் போது, வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று சந்தையின் கதவினை உடைத்து உள்ளே புகுந்து சந்தைக்குள் இருந்து மது அருந்த போவதாக காவலாளியுடன் முரண்பட்ட நிலையில் கையில் மதுபான போத்தல்களுடன் வந்த நபர்கள் சந்தை கட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி கடையடைப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
இன்று (11.08.2023) காலை பொலிஸார் வந்து விசாரணை செய்யும் வரை சந்தை நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.
சம்பவ இடத்திற்கு முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வருகை தந்துள்ளதுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளார் க.சண்முகநாதன் உள்ளிட்ட சபையின் உத்தியோகத்தர்கள் வந்து பார்வையிட்டு பொலிஸார் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான கட்டங்கள் மற்றும் சேதமடைந்த கடைகள் மரக்கறிகளை பார்வையிட்டு அறிக்கையிட்ட பொலிஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறியள்ளதை தொடர்ந்து சந்தை வியாபாரத்தினை மேற்கொள்ள பணித்துள்ளனர்.
வியாபாரம் பாதிப்பு
இது தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச சைபயின் செயலாளர் க.சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில் ,
சந்தையின் சி.சி.ரி.வி கமரா சேதப்படுத்தப்பட்டு முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் எந்த நடவடிக்கையும் இல்லை. நேற்று நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தினால் வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முழுமையான அறிக்கையினை பொலிஸார் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் சேத விபரங்கள் தொடர்பில் பிரதேச சபை ஊடாக அறிக்கை எடுத்து முறைப்பாட்டுடன் பிரதேச சபை சட்டவாளர் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
சந்தை மீது தாக்குதல் மேற்கொண்ட குறித்த நபர்கள் இதற்கு முன்னர் செய்த குற்றத்திற்காக சிறை சென்று அண்மையில் விடுதலையாகியுள்ளனர்.
மேலும் குறித்த நபர்கள் அடாவடியில் ஈடுபட்டுள்மையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அரச சொத்திற்கு சேதம் ஏற்படுத்தி சந்தை வியாபாரத்தினை பாதிப்புக்குள்ளாகியுள்ளமை தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
