மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான நாடாளுமன்ற ஒன்றிய தலைவராக வேலு குமார் தெரிவு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்சியால், மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பரிணாமத்திற்கான நாடாளுமன்ற ஒன்றியம் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒன்றியத்தின் தலைவராக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
உப தலைவர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய பெரேரா, நயனா வாசலகே மற்றும் உதயகுமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும், நாடாளுமன்றத்திற்குள், பல குழுக்கள் மற்றும் ஒன்றியங்கள் இயங்கி வருகின்றன.
மலையக பெருந்தோட்ட சமூகம்
எனினும், அவ்வாறு இயங்குகின்ற எந்த குழுவினாலும் நேரடியாக மலையக பெருந்தோட்ட சமூகத்தின் பிரச்சினைகள் ஆராயப்படுவது மிக குறைந்த மட்டத்திலேயே உள்ளது.

இதனால், மலையக பெருந்தோட்ட சமூகத்தின் எதிர்காலம் தொடர்பான, கொள்கை வகுப்புக்கள் மற்றும் செயற்றிட்டங்களை உருவாக்குதல் போன்றன இடம்பெறுவது இல்லை.
இவ் இடைவெளியை நீக்கும் வகையில், நேரடியாக மலையக பெருந்தோட்ட சமூகத்தை இலக்காக கொண்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்றத்தில் இவ் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam