தலையை துண்டித்து தண்ணீர் வழங்கிய எதிரிகள்! வஞ்சம் தீர்க்கப்பட்ட வரலாறு (Video)
இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புத்தூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கிருந்து சில மைல் தூரத்தில் பிரான்மலை என்ற மலையும் அந்தப் பெயரோடு ஓர் ஊரும் உள்ளது.
சங்க காலத்தில், அந்த மலைக்குப் பறம்பு மலை என்ற பெயர் இருந்தது. அங்கேதான் வேள்பாரி என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான்.
கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்த வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர்.
வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். இவரதுக் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு. பாரி பறம்புநாடு என்ற முந்நூறு (300) ஊர்களைக் கொண்ட பகுதியை ஆட்சி செய்தவர்.
அவ்வளவு சிறிய பகுதிகளை ஆட்சி செய்த போதிலும் அவர் மூவேந்தர்களை விடப் பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத் தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.
இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். கொடை வள்ளல் பாரி வேந்தன் தலை கொய்து கொல்லப்பட்டது ஏன்?
காணொளி வடிவில் தொகுப்பாக,





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
