வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழப்பு! பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கடமை தவறியதாகக் கூறப்படும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பணிநீக்கம் செய்ய பதில் பொலிஸ் மாஅதிபரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இளைஞன் உயிரிழப்பு
தேசிய பொலிஸ் ஆணையத்திடம் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (6) பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்கு பரிந்துரைகளை அனுப்பியுள்ளார்.
கடந்த 1ஆம் திகதி இரவு, நாவல பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளமையானது தற்போது பேசுபொருளாக உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக, வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான பரிந்துரைகளை பதில் பொலிஸ்மா அதிபர் சமர்ப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |