வேலன் சுவாமிகளின் கைது! தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் கண்டனம்
சிவில் உரிமை செயற்பாட்டாளரும், இந்து சமய தலைவருமான வேலன் சுவாமி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை வெட்கக்கேடானது என தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும், கார்ஷால்டன் மற்றும் வாலிங்டனுக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான எலியட் கோல்பர்ன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமி கைது செய்யபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வேலன் சுவாமிகளின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினையிட்டுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு வேலன் சுவாமிகளை சந்தித்து அவர் தமிழ் உரிமைகள் தொடர்பான பணிகளைப் பற்றி கேட்டறிந்தேன். இலங்கை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டமை நம்பமுடியாத கவலையும் அளிக்கிறது.
தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை மௌனமாக்குவதற்கான பிரச்சாரத்தில் அதிகாரிகளின் சமீபத்திய நடவடிக்கை வெட்கக்கேடானது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Last year I got to meet Velan Swamigal and hear about his work on Tamil rights. His arrest by the Sri Lankan authorities is incredibly concerning and worrying.
— Elliot Colburn MP (@ElliotColburn) January 21, 2023
It represents the latest brazen move by authorities in their campaign to silence those who speak up for Tamil rights.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
