வேலன் சுவாமிகள் கைது விவகாரம் : வன்மையாக கண்டித்துள்ள சைவ மகா சபை
தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்றபோது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சத்தனமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.
வணக்கத்துக்குரிய மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காண்பித்தமை மிகவும் பாரதூரமான தவறாகும்.
பக்கச்சார்பற்ற விசாரணை
இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவர்களையும் சமனாக மதிக்க வேண்டிய சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒரு தலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டிடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய அந்த பிரதேசத்து மதத்தலைவரை மிலேச்சத்தனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சமயத்தை அவமதித்த செயலாகவே பார்க்கின்றோம்

இந்த விடயத்தில் அரசு உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை முன்னடுத்து சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான எமது சமயத்தலைவர்களை அவமதிக்கும் செயலை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு உறுதி அளிக்க வேண்டும் என சைவ சமய மக்கள் சார்பாக அகில இலங்கை சைவ மகா சபையினராகிய நாம் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam