விண்ணை தொடும் அளவில் அதிகரித்துள்ள வாகன உதிரிப்பாகங்களின் விலை-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் கோவிட் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைத்துத் துறைகளிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன.
இதனால் குறித்த பொருட்களை கொண்டு தமது வாழ்வாதார தொழிகளை நடத்தும் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி பார்க்கும் போது நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகளில் பாரிய மாற்றம் பதிவாகியுள்ளது.
அந்த வகையில் சந்தையில் உதிரிப் பாகங்களின் விலை கூட வேகமாக உயர்ந்துவிட்டதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனம் பழுது பார்க்கும் நிலையங்களை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,